News November 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ. 21 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
JUST IN விருதுநகருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இன்னும் சரியான தேதி குறிப்பிடாத நிலையில் நாளை(ஜன.16) பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை காலை 11 மணியளவில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 15, 2026
அருப்புக்கோட்டை: விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் சரவணபாலன்(35). இவர் நேற்று(ஜன.14) பைக்கில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் சாலை நடுவே உள்ள பேரிகார்டில் பைக் மோதி சரவணபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 15, 2026
விருதுநகர்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <


