News June 18, 2024
விருதுநகரில் மிதமான மழை…!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 16, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <
News January 16, 2026
விருதுநகர்: பட்டாசு தொழிலாளி மீது பாய்ந்த போக்சோ

ஏழாயிரம்பண்ணை அருகே மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன், (20). பட்டாசு ஆலை தொழிலாளியான இவருடன் பணிபுரிந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமான நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை ஊரக நல அலுவலர் மகாலட்சுமி புகாரில் பாண்டீஸ்வரன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
விருதுநகர்: ரூ.50 கோடி ஒதுக்கீடு என்னாச்சு?

விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என 2009-ல் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின் ஜெயலலிதா முதல்வரான பின் தென்மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது மறைவிற்கு பின் முதல்வரான பழனிச்சாமி இதற்காக முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை பணி துவங்கவில்லை.


