News October 10, 2024

விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

image

கோவை முதல் சென்னைக்கு விமான கட்டணம் 3300 என இருந்த நிலையில், இன்று மூன்று மடங்கு உயர்ந்து, 3300 இருந்த கட்டணம் இன்று, 11 ஆயிரம் ரூபாயாக விமான நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. இதனாலும் விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்தை விட அதிகமாக உயர்த்த பட்டதால் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 15, 2025

கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’. நிகழ்ச்சி

image

கோவை மாநகரில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. அதன்படி, வரும் (நவம்பர்.16) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின சிறப்பு ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News November 15, 2025

கோவையில் மாஸ்டர்ஸ் தடகள போட்டி

image

கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியத்தில் வரும் 30ம் தேதி தடகளப் போட்டி நடக்கிறது. இதில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், 30 வயதில் இருந்து 80 வயதுக்கும் மேற்பட்டோர் என, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம், மேலும் விபரங்களுக்கு 98432 21711 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

தோட்ட தொழிலாளர்களுக்காக பிஎப் அலுவலகம்!

image

கோவை வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காபி, தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பிஎப் தொகையை எடுப்பதற்கோ, அதுகுறித்த தகவல்களுக்கு கேட்பதற்கோ கோவை அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தங்களது வருவாய் பாதிக்கப்படுவதோடு, அலைச்சலும் அதிகரிக்கிறது. எனவே, வால்பாறையில் பிஎப் அலுவலகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!