News July 16, 2024
விபத்து காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் நேற்று எதிர்பாராதவிதமாக இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த 25 நபர்கள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 1 இலட்சம் வீதம் ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
Similar News
News July 8, 2025
நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதியான எர்ரணஅள்ளி மேம்பாலம் அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஏரியில் இருந்து சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். காவலர்களைக் கண்டதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News July 8, 2025
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வருகிற 09.07.2025 அன்று காலை 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், இண்டுர் உள்வட்டம். சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
தர்மபுரியில் இரவு ரோந்து செல்லும் போலீஸ் விவரங்கள்!

தர்மபுரி மாவட்ட காவல்துறை 08.07.2025 தேதிக்கான இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் விபரங்களை வெளியிட்டுள்ளது. மாவட்ட ரோந்து அலுவலராக கே.எம். மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொறுப்பான இரவு ரோந்து அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைக்காக தொடர்புக் கொள்ளலாம்.