News October 17, 2025
விபத்தில்லா தீபாவளி கொண்டாடிட ஆட்சியர் வேண்டுகோள்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 5 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்தவும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்கவும், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட அனைவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
Similar News
News November 17, 2025
மாற்றத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நவ.17ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு காதொலி கருவி, 2 பேருக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.