News August 17, 2025

விதிமீறிய 77 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958-ன் படி சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள் மற்றும் நிறு வனங்கள், 40 உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 77 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது சம்பளபட்டு வாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Similar News

News December 12, 2025

விருதுநகர்: Driving Licence-க்கு முக்கிய Update!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 12, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டில் பிரச்னையா… இங்க போங்க

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை 13ம் தேதி ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறும் இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்று பயனடையலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 12, 2025

சிவகாசி: இளம் பெண்ணிடம் அத்துமீறிய அக்கா கணவர்

image

சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரின் அக்காவின் கணவரான மாரீஸ்வரன் (37) என்பவர் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இளம்பெண் கூச்சலிட்டதால் மாரீஸ்வரன் இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இளம்பெண் புகாரில் மாரீஸ்வரன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

error: Content is protected !!