News April 11, 2024
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

மதுரை தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் மா.வேலுமணி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களவை தோ்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்.,19 அன்று மதுரை மாவட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மீது 98652 22938, 82484 63905, 99410 12190, 78713 87668, 99445 17244 மற்றும் 0452 2530729 ஆகிய எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
மதுரை: தலை நசுங்கி கொத்தனார் பலி.!

மதுரை சோழவந்தான் அருகே விக்ரமங்கலத்தைச் சேர்ந்த தெய்வம் (47) கொத்தனார். இவர் பணி முடித்து போதையில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்டிலேயை படுத்துவிட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை வாகனம் ஒன்று இவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய போலீசார் அவர் தலை மீது ஏறிய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
மதுரை: தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப முடிவு

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தை சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தெப்பத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும் மாநகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பவும் முடிவு செய்துள்ளதாக, மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அறநிலையத் துறை பதில் அளித்துள்ளது.
News November 8, 2025
மதுரை அரசு மருத்துவமனை குப்பையால் பொதுமக்கள் அவதி

மதுரை அரசு மருத்துவமனையின் பின்பக்க வாசலில் மருத்துவக் கழிவுகள் அல்லாத வார்டுகளில் சேரும் உணவு பாக்கெட், குடிநீர் பாட்டில், பிற கழிவுகள் நாள்தோறும் 5 டன் அளவில் சேர்கிறது. இவற்றை உடனுக்குடன் அகற்றினால் தான் மருத்துவமனை வளாகம் சுத்தமாக இருக்கும். அருகிலேயே மார்ச்சுவரி உள்ளதால், அங்கு வருபவர்கள் குப்பையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். விரைந்து நடவடிக்கை மக்கள் கோரிக்கை.


