News November 26, 2025

விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.

Similar News

News January 13, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 579 ▶குறள்: ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. ▶பொருள்: அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

News January 13, 2026

மீண்டும் பரவும் நிபா வைரஸ்.. பதற்றம்

image

மேற்கு வங்கத்தில் 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டதால் அங்கு சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. நிபா, அதிக இறப்பு விகிதங்களை கொண்ட ஆபத்தான வைரஸ் என்பதால் தேசிய அளவிலான சிறப்பு மருத்துவ குழுவும் அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது. மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவும் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News January 13, 2026

அண்ணாமலைக்கு ஹிந்தி தெரியாது: ஃபட்னவிஸ்

image

மும்பை குறித்த <<18833393>>அண்ணாமலையின்<<>> பேச்சால் மகாராஷ்டிராவில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலைக்கு சரளமாக ஹிந்தி பேச தெரியாது எனவும், அவர் ஒன்றும் தேசிய பாஜக தலைவர் இல்லை என்பதால், அவரது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்றும் அம்மாநில CM ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார். மாநகராட்சி தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே இருப்பதால், இந்த விவகாரம் பெரிதாக பாஜக விரும்பவில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!