News November 29, 2024
விடுதியை பதிவு செய்ய உத்தரவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதிகள், தற்காலிகமாக நடத்தும் விடுதிகள், காப்பகங்கள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். உரிய ஆவணங்களுடன் https://tnswp.com என்ற இணையதள முகவரியில் டிசம்பர் 15ம் தேதிக்குள் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும் (அ) 04567230466 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 10, 2025
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ. 10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News November 10, 2025
ராம்நாடு: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க

ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 10, 2025
ராம்நாடு: 714 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு முழுவதும் 2ம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை நடந்தது. ராமநாதபுரம் 4, பரமக்குடி, கீழக்கரை தலா 1 என 6 மையங்களில் தேர்வு நடந்தது. 1,344 பெண்கள் உள்பட 6,522 விண்ணப்பித்தனர். நேற்று நடந்த தேர்வில் 1,178 பெண்கள் உள்பட 5,808 பங்கேற்றனர். 168 பெண்கள் உள்பட 714 பேர் பங்கேற்கவில்லை. இத்தேர்வு மையங்களை எஸ்பி சந்தீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


