News November 11, 2025

விஜய் கட்சியின் சின்னம்.. நேரில் வழங்கினார்

image

தவெகவுக்கு பொதுச் சின்னம் கோரும் மனுவை டெல்லியில் உள்ள ECI தலைமை அலுவலகத்தில் CTR நிர்மல்குமார் வழங்கினார். அதில், ECI-ல் ஏற்கெனவே உள்ள ஆட்டோ, விசில், கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை, கப்பல் ஆகிய சின்னங்களும், தவெக நிர்வாகிகளின் பரிந்துரைகள் மூலம் புதிதாக வரையப்பட்ட 5 சின்னங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு உங்க சாய்ஸ் எந்த சின்னம்? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News December 6, 2025

டிசம்பர் 6: வரலாற்றில் இன்று

image

*1877–தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் முதலாவது இதழ் வெளியானது *1892–சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பிறந்தநாள் *1935–நடிகை சாவித்திரி பிறந்தநாள் *1956–அம்பேத்கர் நினைவு நாள் *1971–வங்கதேசத்தை அங்கீகரித்த காரணத்தினால் இந்தியா உடனான தூதரக உறவுகளை பாகிஸ்தான் துண்டித்தது *1988–ரவீந்திர ஜடேஜா பிறந்தநாள் *1992–பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் நடந்த கலவரங்களில் 1,500 பேர் உயிரிழப்பு

News December 6, 2025

மக்களிடம் பிளவை உண்டாக்க முயற்சி: செல்வப்பெருந்தகை

image

திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும், மத நல்லிணக்கத்தை சீரழிக்கவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு மகிழ்ச்சியாக வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக, RSS, இந்து முன்னணி சேர்ந்து வேலை செய்வதாக அவர் சாடியுள்ளார். மற்ற ஆறுபடை வீடுகளில் தீபம் ஏற்றாதவர்கள், எதற்காக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முயற்சிக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 6, 2025

‘LORD’ வார்த்தையை நீக்குக: பாஜக MP

image

பாடப்புத்தகங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெயர்களில் உள்ள LORD வார்த்தையை நீக்க வேண்டும் என பாஜக எம்பி சுஜீத் குமார் வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், பாடப்புத்தகங்கள், அரசு ஆவணங்கள், அரசு தளங்களில் இன்னுமும் LORD வார்த்தை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் அதை நாம் பின்பற்றுவது, ‘காலனித்துவ மனநிலையில்’ நீடிப்பதை உணர்த்துவதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!