News November 3, 2025
விஜய்யின் கூட்டணி கணக்குதான் என்ன?

பாஜக வீசும் கூட்டணி வலையில் சிக்காமல் இருக்க சுறா போல எதிர்நீச்சல் போடுகிறாராம் விஜய். அதாவது, பாதிக்குப் பாதி சீட், கேட்கும் தொகுதிகளை கொடுக்கவேண்டும், CM வேட்பாளர் குறித்து தற்போதைக்கு அறிவிக்கக்கூடாது என பல டிமாண்டுகளை விஜய் அடுக்குகிறாராம். இதனால், விஜய்யை எப்படி கூட்டணிக்குள் இழுப்பது என தெரியாமல் காவி புள்ளிகள் தலைசுற்றிபோய் இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News December 9, 2025
தேஜஸ் ரயில் கந்தன் எக்ஸ்பிரஸாக மாற்றமா?

சென்னை – மதுரை இடையேயான தேஜஸ் ரயில் வரும் 14-ம் தேதி முதல் ‘கந்தன் எக்ஸ்பிரஸ்’ என பெயர் மாறுவதாக பதிவிட்ட வானதி சீனிவாசன் சற்றுநேரத்தில் அந்த பதிவை டெலிட் செய்தார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக TN அரசு, பாஜக – இந்து முன்னணி இடையே நடக்கும் மோதலானது தற்போது சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. இந்நிலையில், வானதியின் இந்த பதிவு அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
News December 9, 2025
காதல் வலைவிரிக்கும் கயாது லோஹர் கிளிக்ஸ்

இதழோர ஈரம் குளிர்வித்தாலும், இலைமறை காயாய் படும் அவளது பார்வையோ இனம்புரியாத இதமான வெப்பத்தை அளிக்கிறது. காதோரம் சிறியதாய் மின்னும் வளைய காதணி வண்ணத்துப்பூச்சியாய் சுற்ற, சிரிப்பில் உதிர்ந்த முத்துக்களை சங்கு கழுத்து சரியாக பற்றுகிறது. மேனி ஒளிர, கண்கள் காதல் சொல்ல சற்றே கவர்ச்சியுடன் நிற்கிறார் கயாது லோஹர். இந்த கவிக்கு சொந்தக்காரியின் போட்டோஸை மேலே swipe செய்து பாருங்கள். பிடிச்சா லைக் போடுங்க.
News December 9, 2025
இந்த கீரையில் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக கீரை என்றாலே ஆரோக்கியமான உணவு தான். மண்ணின் பொக்கிஷம் எனப்படும் பருப்பு கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *ஒமேகா-3 அதிகம் உள்ளதால்
இதயத்திற்கு நல்லது *கெட்ட கொழுப்பை குறைப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது *இதயத்தை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது *மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது *கண், சருமத்திற்கு நல்லது *மலச்சிக்கல் குணமாகும் *குடல் நோய்களை தடுக்கிறது.


