News February 24, 2025
விசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் பிப் 2025ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.
Similar News
News July 8, 2025
கூலி தகராறில் பெயிண்டர் கொலை: ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு, அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஆண்டவர்(55). இவரிடம் வேலை பார்த்து வந்த சதீஷ் (38) என்பவர்,நேற்று முன்தினம் தனக்கு தர வேண்டிய கூலி ₹2,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ், ஆண்டவரின் நெஞ்சுப் பகுதியில் அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆண்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை!
News July 8, 2025
ஈரோடு: திருவிழா பூச்சாட்டுதலுடன் ஆரம்பம்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் கிராமம் சேகண்டியூர் பகுதியில் அமைந்துள்ள குட்ட முனியப்பன் கோவில், ஆடி 1 பொங்கல் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த, குட்ட முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டனர்.
News July 7, 2025
ஈரோடு: சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவன், கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்து, சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிறுவனுக்கு பாம்பு விஷமுறிவு மருந்து 20 பாட்டில்கள் செலுத்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் 72 மணி நேரத்திற்கு பின் சிறுவனுக்கு நினைவு திரும்பியது. சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்களை, சிறுவனின் பெற்றோர் பாராட்டினர்.