News November 30, 2024
விஏஓ மணிகண்டன் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அ.மணக்குடியில் விஏஓ வாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வா.து.நடராஜனுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் புகாரில் விசாரணை செய்த கோட்டாட்சியர் விஏஓ மணிகண்டன் போலி பத்திரம் மூலம் மோசடி செய்தது தெரிய வந்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Similar News
News November 8, 2025
ராம்நாடு: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) ராம்நாடு மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 8, 2025
ராம்நாடு: காதல் விவகாரம்.. 2 பேருக்கு வெட்டு

திருவாடானை கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவியை அதே கல்லூரியில் பயிலும் தொண்டி மாணவரும், மானாமதுரை வாலிபரும் காதலித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மானாமதுரையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறில் தொண்டி சத்யபிரசாத் (26), நம்புதாளை முகமது ரிஸ்வான் மீது வாள், கத்தியால் வெட்டு விழுந்துள்ளது. இதில் மானாமதுரையை சேர்ந்த கவிபாண்டி (24) என்பவரை தொண்டி போலீசார் கைது செய்தனர்
News November 8, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை

இன்று (நவ. 7) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


