News April 12, 2024
வாக்குப்பதிவு: கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதள கூட்டரங்கில், காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யும் பொருட்டு சிறப்பு வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News November 12, 2025
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (11.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தகவல். முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை சமர்ப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்
News November 11, 2025
கிருஷ்ணகிரி உலுக்கிய லெஸ்பியன் உறவு.. போட்டோஸ் வைரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 5 மாத ஆண் குழந்தை மர்மமாக நவ-5, உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், குழந்தையின் தாய் பாரதி (25) தனது காதலி சுமித்ரா (22) உடன் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், பாரதி சுமித்ராவுக்கு அனுப்பிய அதிர்ச்சி போட்டோஸ் தற்போது வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


