News November 16, 2024
வாக்காளர் முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

கரூர் வட்டத்தில் கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டையில் பல்வேறு திருத்தங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News February 19, 2026
கரூர் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட பள்ளிகளில் 24 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளன. 10-ம் வகுப்பு தகுதி, 21-40 வயதுடைய பெண்கள் https://karur.nic.in/ தளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களை வரும் 27-ஆம் தேதி மாலை 5:45-க்குள் ஒன்றிய/மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஓராண்டு பணிக்குப்பின் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என கலெக்டர் தங்கவேல் அறிவிப்பு.ஷேர் பண்ணுங்க
News February 19, 2026
கரூர் அருகே கோர விபத்து!

கரூர் மாவட்டம், மொச்ச கொட்டாம்பாளையம் சாலையில், ஞானசேகரன் என்பவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சுதாகர் ஒட்டி வந்த கார் மோதியதில், ஞானசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 18, 2026
கரூர்: இனி எல்லா CERTIFICATES-ம் உங்கள் phone-ல்

கரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


