News November 16, 2024
வாக்காளர் சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் ஜனவரி 2025ஐ அடிப்படையாகக் கொண்டு 18 வயது எட்டும் அனைவரும், புதிய வாக்காளராக சேர பதிவு செய்யலாம். மேலும் இதில் பெயர், முகவரி திருத்தம், நீக்கல் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இது அந்தந்த பகுதி வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். ஷேர் செய்யவும்
Similar News
News February 19, 2026
அரியலூர்: நம்ம ஊரு நம்ம பெருமை!

அரி+இல்+ஊர்= அரியலூர் (அரி- விஷ்ணு; இல்- உறைவிடம்; ஊர்- பகுதி) விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே இந்த அரியலூர் என்று கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டுக் கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என கூறப்படுகிறது. நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. அதே போல் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கான கல்விக் கடன் முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்.20-ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News February 19, 2026
அரியலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


