News April 10, 2024
வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் விநியோகம்

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, சென்னை மாவட்டத்தில் பணியாற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களை தேர்வு செய்யும் பணி ரிப்பன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்டத்தில் உள்ள 11.56 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
“49,347 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்”

சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 96,056 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 49,347 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதில் இன்று மட்டும் 7 மையங்களில் 956 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தியும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டும் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
News December 7, 2025
சென்னையில் அன்புமணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த கோரியும், திமுக அரசை கண்டித்தும் வரும் டிசம்பர் 17ஆம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூகநீதியை பாதுகாக்கவும், அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
News December 7, 2025
JUST IN: சென்னையில் பிரபல தயாரிப்பாளர் கைது

திருமங்கலம் போதைப்பொருள் வழக்கில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் ஒருநாள் கஸ்டடியில் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் வழங்கிய தகவலின் பேரில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது இன்று செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த தினேஷ் ராஜ் தற்போது தனுஷின் மருமகன் பவிஷின் ’லவ் ஓ லவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


