News March 24, 2024
வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News November 12, 2025
திண்டுக்கல் இன்றைய முக்கிய செய்திகள்

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் முகவர் கூட்டம்.
திண்டுக்கல் மாநகராட்சி: “முதல்வர் படைப்பகம்” பூமி பூஜை.
நத்தம்: கைலாசநாதர் கோவிலில் கால பைரவர் பூஜை.
நத்தம்: ரெட்டியபட்டியில் வாக்காளர் பட்டியல் பயிற்சி.
நத்தம்: பால் வேன் ஓட்டுநர் விபத்தில் உயிரிழப்பு.
சிறுமலை: புதிய சாலை பூமி பூஜை, தார் சாலை பணிக்கு அமைச்சர் எம்.எல்.ஏக்கு நன்றி தெரிவிப்பு.
News November 12, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (நவம்பர் 12) இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
திண்டுக்கல்லில் இருவர் மீது குண்டர் சட்டம்!

திண்டுக்கல், நல்லாம்பட்டி சாலையில் மினி பஸ்ஸை வழிமறித்து பணப்பை, செல்போன் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (31) மற்றும் ராசு (25) இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எஸ்.பி. பிரதீப் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார். அதையடுத்து, தாலுகா காவல்துறையினர் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


