News March 24, 2024
வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News November 10, 2025
புஞ்சைபுளியம்பட்டி: ஒவ்வொரு நாளும் திக்.. திக்..!

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை விவசாய நிலங்கள் அருகே உள்ள மலைக்குன்றின் மேல் படுத்திருந்ததை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அது நவீன ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News November 10, 2025
சித்தோடு குழந்தை கடத்தல்! திணறும் போலீஸ்

சித்தோடு அருகே நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பியின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடந்த மாதம், 15-ம் தேதி நள்ளிரவு கடத்தப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைத்தும் இதுவரை விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தை கடத்தப்பட்டு, 25 நாட்களாகியும் சிறு தடயம் கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
News November 10, 2025
திண்டல்: முதியவர் தூக்குமாட்டி தற்கொலை

ஈரோடு திண்டல் காரப்பாறையை சேர்ந்தவர் ராமசாமி (64). இவர் கார் பட்டறையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராமசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இவர் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையானவர்.


