News March 31, 2025
வழக்கறிஞர் வெட்டிக் கொலை

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற வழக்கறிஞர் நேற்று (மார்.30) வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம்? என்பது குறித்தும் கொலை செய்த மர்ம கும்பல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News July 9, 2025
சென்னையில் விருப்ப எண்கள் வாங்க அரிய வாய்ப்பு

பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளர்களுக்கான விருப்ப செல்போன் எண்கள் (பேன்சி நம்பர்) ஜூலை 13 வரை மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசி எண்ணாக பேன்சி எண்களை பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News July 9, 2025
விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாத பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும், நான்கு விரைவு ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை 4ஆக அதிகரித்து இயக்கப்பட உள்ளது. எழும்பூர் – சேலம் விரைவு ரயிலில் இருமார்க்கத்திலும், வரும் செப்., 6ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படும்.
News July 9, 2025
பெயிலானாலும் வேலை நிச்சயம்; TN அரசின் சூப்பர் திட்டம்

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை TN அரசு தொடங்கியுள்ளது. இதில் தங்கும் வசதி, உணவு&ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் <