News May 2, 2024
வழக்கறிஞர் சங்க தலைவர் தேர்வு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கத்திற்கு 2024-2025ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பொதுச்செயலாளராக சரவணக்குமார், துணைத் தலைவராக டி. சி. பி. சக்கரவர்த்தி, பொருளாளராக பி. சரவணக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News December 16, 2025
மதுரை: ஆயுதப்படை போலீஸ் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

விராதனூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார்(31) சென்னை நகர ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். டிச14 சென்னையிலிருந்து உறவினர்கள் 5 பேருடன் இரயிலில் வந்ததாகவும், இடையில் ஒரு நிறுத்தத்தில் இறங்கியவர் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. எனவே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? (அ) தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 16, 2025
காந்தி மியூசியத்தில் இலவச தியான பயிற்சி

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச தியான தினமான டிசம்பர் 21 ல் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை உள் அமைதி உலகளாவிய நல்லிணக்கம் எனும் தலைப்பில் இலவச தியான பயிற்சி நடக்கிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம், முன்பதிவிற்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸை நேரிலோ 99941 23091 என்ற வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
மதுரை: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

மதுரை மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் இங்கு <


