News November 17, 2024
வரும் 26ஆம் தேதி வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரத்தில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 27 இருசக்கர வாகனங்கல் மற்றும் 1 லாரி என 28 வாகனங்களும் வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்கள் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம் அருகே பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனத்தை ஏலம் எடுப்போர் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

ஒரகடம் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போதை வஸ்துக்கள் கொரியர் மூலம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனை செய்ததில், 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்த துரைசெல்வன்(27) என்பவரை கைது செய்தனர்.
News February 19, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 18, 2026
காஞ்சியில் சம்பளப் பிரச்னையா?

காஞ்சி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <


