News August 20, 2024

வயநாடு பேரிடர் நிதி; அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேர்ப்பு

image

கடத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அன்பழகன் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு பொது நூலக துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனுசியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நேற்று கடத்தூர் த தென்கரைக்கோட்டை காந்திநகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வயநாடு பேரிடர் நிதி சேர்த்தனர்.

Similar News

News January 25, 2026

தருமபுரி: தொழிலாளி மரணம்; தொடரும் மர்மம்!

image

தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40) வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

தருமபுரி: துக்க வீட்டிற்கு சென்றவர் பலி!

image

மொரப்பூர் அருகே பொம்பட்டியை சேர்ந்த இன்ஜினீயர் மதன்குமார் (25). பெங்களூருவில் பணிபுரிந்து வந்த இவர், துக்க வீட்டிலிருந்து பசுவாபுரம் வழியாக மொரப்பூர் நோக்கி வந்தார். அப்போது அம்பாளப்பட்டி அருகே வேகத்தடையில் நிலைதடுமாறி பைங்கில் இருந்து கீழே விழுந்தார். கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்,

News January 25, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.24) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான், தொப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

error: Content is protected !!