News November 10, 2024

வயநாடு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி

image

வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு பந்தலூர் மேம்பாட்டு குழு சார்பில் ஏற்கனவே மூன்று குடும்பங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது . தற்போது சேரம்பாடியில் கணவனை இழந்த செல்மாவுக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது. பந்தலூர் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீபக் ராம், அனுப், சனுஜா, மகேந்திரன், ஜனனி ஆகியோர் வழங்கினார்கள்.

Similar News

News November 8, 2025

நீலகிரிக்கு 2 நாட்கள் எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதகாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உதவி தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை https://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2025-26 ஆண்டிற்கான தேசிய கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் நீலகிரியை சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

News November 8, 2025

நீலகிரி: G Pay / PhonePe இருக்கா? இது முக்கியம்!

image

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!