News April 25, 2025
வந்தவாசி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சத்யநாராயணன் (38). இவரது திருமணத்தின்போது மனைவி புனிதாவுக்கு அளித்த 5 பவுன் நகையை சத்யநாராயணன் அடகு வைத்துள்ளார். அதனை மீட்டு தருமாறு புனிதா கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சத்யநாராயணன் வீட்டில் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
திருவண்ணாமலையில் நாளை மின் தடை!

தி.மலை: மழையூர் துணை மின்நிலையத்தில் பராமாரிப்பு பணிக நாளை(நவ.11) நடைபெறவுள்ளதால் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மழையூர், பெரணமல்லூர், தென்னாத்தூர், விசாகுளத்தூர், ஆணைபோகி, தேசூர், மேலச்சேரி, கடம்பை, மடம், தவனி, விசாமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 10, 2025
தி.மலை: சிறுமி கர்ப்பம் ; கணவர் மீது போக்சோ!

தி.மலை: வந்தவாசி நகரைச் சேர்ந்தவர் அமீர்(27). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் சிறுமி வந்தவாசி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அமீர் உட்பட 4 பேரை போக்சோ, திருமணம் தடை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
News November 10, 2025
தி.மலை கோயிலுக்கு வந்த நடிகர் ரியோ ராஜ்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று (நவ.09) ’ஆண் பாவம் பொல்லாதது’ படம் வெற்றியடைய வேண்டி நடிகர் ரியோ சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


