News October 19, 2025
வத்திராயிருப்பு அருகே மூதாட்டி தீக்குளிப்பு.

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கடந்த அக்.14 ஆம் தேதி மூட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் வைத்து உடலில் கற்பூரத்தை தடவி தீ வைத்து காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கொண்டு சென்று மேல் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Sales Coordinator பிரிவில் 60 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 – 35 வயதிற்குட்பட்ட 1-2 வருடன் அனுபவமுள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News December 7, 2025
விருதுநகர்: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
விருதுநகர்: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய காதல் கணவர்

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து விக்னேஸ்வரன் (22). பட்டாசு தொழிலாளியான இவர் 4 மாதத்திற்கு முன் பாக்கியலட்சுமியை காதல் திருமணம் செய்துள்ளார். முத்து விக்னேஸ்வரன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பாக்கியலட்சுமி பணம் தர மறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் முத்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.


