News April 25, 2025
வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகளுக்கு அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்த விபரங்கள் மற்றும் தேவையான கண்மாய் பட்டியல் விபரங்களுடன் கோட்டாட்சியர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். மண் எடுப்பதற்கு உரிய ஆவணங்களான பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் பதிவு செய்து, அதற்கான ரசீதினை பெற்று கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
விருதுநகர்: 6 நிமிடத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த பாஜக நிர்வாகி

பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாஜக மாவட்ட துணை தலைவர் ராமதாஸ். இவரது போனிற்கு வந்த பி.எம் கிசான் லிங்கை ஓபன் செய்த போது அடுத்த 6 நிமிடத்திற்குள் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து விருதுநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நிலையில் பணத்தை எடுத்த நபரின் வங்கியில் இருந்து ரூ.3 லட்சத்தை எடுக்க முடியாதபடி லாக் செய்து கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
News November 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.21 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
விருதுநகரை உலுக்கிய கொலையில் மேலும் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் ஏற்கனவே ஒருவர் சுட்டு பிடிக்கப்பட்டு நிலையில் மற்றொரு குற்றவாளி முனியசாமியை போலீசார் ட்ரோன் மூலம் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


