News August 4, 2024
வட மாநில தொழிலாளியிடம் வழிப்பறி செய்த போலீஸ் கைது

திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தில் ஜப்பான் சிட்டி தொழில் பேட்டையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு அஜித்குமார் (34) என்ற காவலர் வட மாநில தொழிலாளர் ஒருவரிடம் இருந்த ரூ.1,000 பறித்துக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News January 13, 2026
செங்கல்பட்டு: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இது அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
News January 13, 2026
செங்கல்பட்டு: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 13, 2026
செங்கல்பட்டு: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

செங்கை மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செங்கையில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9790550052எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!


