News July 13, 2024

வடமாநில இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

image

கீழடி அருகே தனியார் டைல்ஸ் கம்பெனியில் மதுசூதன பிரஜாபதி, கயானந்தா பிரதாப் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று மது போதையில் கீழடி அருகே உள்ள தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News July 8, 2025

சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.2 கோடி நிதி

image

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர் சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ரூ.2 கோடி நிதியை ஒதுக்கியுள்ளனர். விரிவாக்கப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி ஆகியோர் இன்று (ஜூலை.08) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் வேலை! ரூ.85,000 வரை சம்பளம்

image

சிவகங்கை மக்களே பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE IT

News July 8, 2025

இளையான்குடி அருகே கார் விபத்தில் மனைவி, மகள் பலி

image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தை சேர்ந்த முருகன் விஏஓ முருகன் நேற்று (ஜூலை07) அதிகாலை தனது மனைவி, 2 மகள்களுடன் இளையான்குடி அருகே கோட்டையூர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது. இதில் மனைவி, மகள் பலியானர். முருகன் மற்றொரு மகளுக்கு சிறிய காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!