News July 15, 2024

வடமாநிலத்தைச் சேர்ந்தவரிடம் பணம், செல்போன் பறிப்பு

image

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் டிசம்பர் பாண்டே (45). சிட்லபாக்கத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்த இவர் இன்று (ஜூலை 15) அதிகாலை கோவளம் ECI சர்ச் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் டிசம்பர் பாண்டேவை மடக்கி கத்தியால் வெட்டி செல்போன், ரூ.1000 பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 10, 2025

இறந்து கிடந்த முதியவரின் காலை கடித்து குதறிய நாய்கள்

image

ஜமீன் பல்லாவரம், சுபம் நகர், மூவரசம்பட்டு ஏரி அருகே நேற்று காலை நடைப்பயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள காலி இடத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் காலை நாய் ஒன்று கடித்துக் குதறியது. தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News July 10, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜூலை 09) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!

News July 9, 2025

ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

image

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!

error: Content is protected !!