News September 29, 2025
வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வருவாய் துறை, மின்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 12, 2025
தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு செய்யும் அனைத்து மீன் வளர்ப்பு விவசாயிகளும், மீன் வளர்போர் மேம்பாட்டு முகாமில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதில் உறுப்பினர் ஆகும் மீன வளர்போருக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 12, 2025
அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேம்பாட்டு பணி மேற்கொள்வது தொடர்பாக இன்று (நவ.11) மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இஆப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் நாகவேலு, சாஸ்திரா பல்கலைகழக நிதி அலுவலர் கல்யாண சுந்தரம், நிலைய மருத்துவ அலுவலர் அமுத வடிவு மற்றும் பலர் உள்ளனர்.


