News October 15, 2024
வடகிழக்கு பருவமழை: அமைச்சர் திடீர் ஆய்வு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பச்சப்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை ராஜேந்திரன் இன்று (அக்.15) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News July 8, 2025
தீரா கடன்களை தீர்க்கும் நங்கவள்ளி கோயில்!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்ம சாமி- சோமேஸ்வரசாமி கோயில் உள்ளது. இது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலாகும். இங்கு நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். இதை SHARE பண்ணுங்க.
News July 8, 2025
2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190) இன்றும் (ஜூலை 08), நாளையும் (ஜூலை 09) போத்தனூர்-கோவை-இருகூர் மார்க்கத்திலும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) இன்றும், நாளையும் கோவைக்கு செல்லாமல் போத்தனூர்-இருகூர் மார்க்கத்தின் வழியே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது எனவே இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ளுமாறு வேண்டுகோள்!
News July 8, 2025
சேலம் சரகத்தில் ரூ.20 கோடிக்கு மாம்பழம் விற்பனை

சேலம் சரகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மாம்பழம் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கடைசி ரகமான நீலம் வகை மாம்பழம் விற்பனை நடைபெற்று வருகிறது. சேலம் சரகத்தில் மட்டும் நடப்பாண்டு சீசனில் சுமார் ரூபாய் 20 கோடி அளவுக்கு மாம்பழங்கள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம் சீசன் 100 நாட்கள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.