News January 15, 2025
வங்கி ஏடிஎம் இயந்திரம் கல்லால் உடைத்து சேதம்

அந்தியூரில் உள்ள தனியார் வங்கியில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அந்தியூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்வையிட்டு, குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பணம் ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News November 7, 2025
பவானி: பட்டப்பகலில் துணிகரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

பவானியில் பட்டப் பகலில் பைனான்ஸில் பூட்டை உடைத்து ரூ.55,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பைனான்ஸ் உரிமையாளர் விவேகானந்தன் போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் படி, ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் குப்பிபாலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர்களை கைது செய்து, ரூ.55,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
News November 7, 2025
டெட் தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் டெட் தேர்வுக்கு மண்டல அளவில் முன்மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் எட்டாம் தேதி ஈரோடு வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையத்தில் நடைபெறும் இந்த முன்மாதிரி தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள https://forms.gle/ovgkrtpSSQbAeP6L7 லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்டம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


