News November 25, 2025

வங்கியில் பணம் பாதுகாப்பாக இருக்க CHECK THIS!

image

கூகுளில் வங்கியின் பெயரில் பல போலி வலைதளங்கள் இருப்பதால், பணத்தை இழக்கும் அபாயம் இருந்துவந்தது. இனி அந்த கவலையே வேண்டாம். இதற்கான புதிய விதிகளை RBI கொண்டுவந்துள்ளது. அதாவது, இனி நீங்கள் பயன்படுத்தும் வங்கிகளின் ஒரிஜினல் வலைதளம் அனைத்தும் ‘bankname.bank.in’ என்ற URL-ல் தான் வரும். இப்படி வரும் வலைதளங்களை மட்டுமே நம்பி Access பண்ணுங்க. யாரும் பணத்தை இழக்காமல் இருக்க SHARE THIS.

Similar News

News January 21, 2026

பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

image

சம்பாதிப்பதை போல, பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதிலும் கவனம் தேவை. இல்லையேல், திடீர் இன்னல் ஏற்படலாம். அதனால், பணத்தை 50:30:20 விதிப்படி பிரிப்பது நல்லது. அத்தியாவசிய தேவைக்கு 50% *விரும்பும் விஷயங்களுக்கு 30% *சேமிப்புகளுக்கு 20%. ஒரு ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க ஆசை வந்தால், உடனே கடைக்கு கிளம்ப வேண்டாம். அப்பொருள் தேவையா என ஒருநாள் பொறுமையாக யோசிங்க. உங்களுக்கே பதில் கிடைக்கும்.

News January 21, 2026

சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

image

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News January 21, 2026

நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் சாதனை!

image

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணியளவில் FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன்மூலம் மொரார்ஜி தேசாய் (6), மன்மோகன் சிங் (5), அருண்ஜெட்லி (5), ப.சிதம்பரம் (5), மற்றும் யஷ்வந்த் சின்ஹா (5) உள்ளிட்ட Ex. நிதி அமைச்சர்களை விட அதிகமுறை மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெறுவார்.

error: Content is protected !!