News August 6, 2024
வக்பு சட்ட முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் – நவாஸ்கனி

டெல்லியில் நேற்று ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி செய்தியாளர்களை சந்தித்தார். வக்பு சொத்துக்கள் தொடர்பாக சட்டத்தில் 40 திருத்தங்களை கொண்டு வர மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக ஆட்சிக்கு பேராபத்து உருவாகும். இந்தியா கூட்டணி கட்சி, பிற கட்சிகள் ஆதரவோடு அதனை நாங்கள் தோற்கடிப்போம். இந்த முடிவை பாஜக பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
Similar News
News January 23, 2026
பாம்பன் பாலம் கடந்து வந்த பாதை!

1902 ஆங்கிலேயர் காலத்தில் பாலம் கட்டுமான பணிகள்
1913 கப்பல்கள் செல்ல தூக்குப்பால பணிகள் ஜூலையில் தொடங்கின.
1914 பிப்.24 ரயில் போக்குவரத்து தொடங்கியது.
2007 அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
2022 டிச. 23 ரயில் போக்குவரத்து நிறுத்தம்
2026 ஜன.22 பாலத்தை அகற்றுவதற்கான பணிகள்
பாம்பன் பாலத்தின் உங்களின் நினைவுகளை பகிருங்க..
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!
News January 23, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News January 22, 2026
இராம்நாடு: விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

பாம்பனில் ஆங்கிலேயர் அமைத்த பழைய ரயில் தூக்குபாலம் அதன் உறுதித்தன்மை இழந்ததால் ரயில்வே நிர்வாகம் அதனை அகற்ற முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு ரூ.2.81கோடியில் தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இன்று(ஜன.22) முதல் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பூஜையானது தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ளது.


