News November 30, 2024

லாரி, கார் நேருக்கு நேர் மோதியதில் தாய், மகன் பலி

image

மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வாசுதேவன் (40), மனைவி அனிதா (33) இவர்களது மகன் கனிஷ்கர் (15) அருண்மொழி (14) ஆகியோர் சொந்த காரில் இன்று அழகன்குளம் வந்தனர். ராமநாதபுரம் கருங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் அனிதா, கனிஷ்கர் இறந்தனர். காயமடைந்தோருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 12, 2025

BREAKING இராமநாதபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.12) கனமழைக்கான மஞ்சள் அலட்ர் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

ராம்நாடு: வீடு புகுந்து 11 பவுன் நகை திருட்டு

image

தொண்டி அருகேயுள்ள எம்ஆர் பட்டினம் பகுதியைச் சேர்ந்த நதியா (41) வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுள்ளது. அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த 7 பவுன் டாலர் செயின், 2 பவுன் டாலர் செயின், 2½ பவுன் நெக்லஸ் உள்பட 11½ பவுன் தங்க நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இது குறித்து தொண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News November 12, 2025

ராம்நாடு: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

ராம்நாடு மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!