News October 10, 2024
ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 184 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
Similar News
News December 9, 2025
செங்கல்பட்டு: கத்தி முனையில் அரங்கேறிய பயங்கர சம்பவம்!

பொத்தேரியை சேர்ந்த தஷ்வந்த் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பொத்தேரி கல்லூரி சாலையில் நடந்து செல்லும் போது திடிரென்று மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து தஷ்வந்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல் போன் மற்றும் கையில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
செங்கல்பட்டு: விளையாட்டே வினையாய் அமைந்த சோகம்

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷின் மகள் சாலினி ஸ்ரீ (6), தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டின் முன் சாலினி விளையாடிக்கொண்டிருந்தபோது, கால் தடுமாறி விழுந்ததில் நெற்றியில் காயமடைந்து மயங்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்சாலினி உடலை பார்த்து கதறி அழுதனர்.
News December 9, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


