News August 20, 2024
ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனி பகுதியில் இன்று வருவாய் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத பட்டாசு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அருகே அவர் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து தகர செட்டிற்கு சீல் வைத்தனர்.
Similar News
News January 20, 2026
இருக்கன்குடியில் தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியீடு

இருக்கன்குடி நீர்தேக்கத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், மேலகரந்தை பகுதி விவசாயிகளுக்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் நாளை(ஜன.21) முதல் ஜன.26 வரை 7 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் 30.24 மில்லி கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் 1,274,07 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
News January 20, 2026
விருதுநகர்: அ.தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

அ.தி.மு.க., மாநில மாணவர் அணி துணை செயலாளராக நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மச்ச மணிகண்டன் கடந்த ஒரு சில மாதங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஓரிரு மாதத்திலேயே அவரது பதவியை பறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகார பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று முதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
News January 20, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


