News June 17, 2024
ரூ.1000 உதவித் தொகை: பட்டியல்- பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி

புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த வேலை தேடுபவா்களுக்கும் , அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவா்களுக்கும் இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். நிறைவு செய்த விண்ணப்பங்கள் வரும் 20-ஆம் தேதி முதல் பெறப்படும்.
Similar News
News January 15, 2026
புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!
News January 15, 2026
புதுச்சேரி: பூண்டு வெடி சம்பவத்தில் 2 பேர் கைது

வில்லியனூரைச் சேர்ந்த பாண்டியன் தன் மாமியார் ஜெரீனா உடன் காட்டுப்பன்றி வேட்டையாடியதில் பூண்டு பட்டாசு பயன்படுத்தினர். மீதமுள்ள பட்டாசுகளை ஸ்கூட்டரில் வில்லியனூருக்கு கொண்டு செல்லும்போது கூடப்பாக்கம் அருகே வெடித்ததில், ஜெரீனா உடல் சிதறி பலியானார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்ததாக ஜெரீனாவின் மகன் விஜய், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
News January 15, 2026
புதுச்சேரி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: [<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


