News November 19, 2024

ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

கூட்டுறவுத்துறை சார்பில், 71 ஆவது கூட்டுறவு வார விழா இன்று(நவ.19) ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News

News December 9, 2025

பரமக்குடி; 13,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி பட்டா மாறுதலுக்கு ரூபாய் 13000 லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 9, 2025

ராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News December 9, 2025

ராமநாதபுரம்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!