News April 23, 2025
ராயகிரி அருகே 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ராயகிரி அருகே TN 79 E 3274 என்ற எண் கொண்ட Tata Ace வாகனத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் மகன் கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News November 13, 2025
தென்காசியில் வரும் 16ஆம் தேதி கண் சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சுப்பராஜா சேரிட்டி டிரஸ்ட் பில்டிங்கில் வரும் நவ.16ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாளை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
News November 13, 2025
செங்கோட்டை – நெல்லை ரயில் 13 நாட்கள் ரத்து

நெல்லை ரயில் நிலைய 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி காரணமாக செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் ரயில் நெல்லையிலிருந்து மதியம் 1.40 மணிக்கு செங்கோட்டை புறப்படும் ரயில் ஆகியவை சேரன்மகாதேவி – நெல்லை – சேரன்மகாதேவி இடையே இன்று 13ம் தேதி மற்றும் 14, 15, 17, 19, 20, 21, 22, 24, 25, 26, 28, 29 ஆகிய தேதிகளில் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


