News August 22, 2025
ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Similar News
News January 25, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 24, 2026
அதிமுகவில் இணைந்தார் தர்மர்.MP

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராக உள்ள, மாநிலங்களவை உறுப்பினர். ஆர். தர்மர், அதில் இருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். இன்று (ஜன, 24) மாலை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் ஆதரவாளர்கள் இருந்தனர்.