News August 22, 2025
ராம்நாடு: விலை மோசடியா புகார் எண் இதோ…!

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <
Similar News
News January 21, 2026
இராம்நாடு: கண்மாயில் தவறி விழுந்த இளைஞர் பலி

தேவகோட்டையை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாரதி(28). இவர், நேற்று கட்டடப் பணிக்காக திருவாடானை அருகே கல்வழியேந்தல் கிராமத்திற்கு வந்தார். கட்டடத்ததிற்கு தண்ணீர் எடுக்க அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்தவர் மூழ்கி உயிரிழந்தார். திருவாடானை போலீசார் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 21, 2026
ராம்நாடு : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 21, 2026
இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.26 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.


