News May 3, 2024

ராம்நாடு: பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா

image

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகள் தாவரவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக நாசர் என்பவர் பணிபுரிந்தார். வருகிற 31ஆம் தேதி இவரது பணி நாள் முடிவுறுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தாவரவியல் ஆசிரியர்கள் பாராட்டு விழா நடத்தினார்கள். இதில் துறை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 7, 2025

இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கசென்ற மீனவர்களை கடந்த அக். 9 நள்ளிரவு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 26 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டதால் தலா ரூ.2.50 லட்சம் அபராதமும், 2வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தார்.

News November 7, 2025

ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம் இன்று (நவ. 7) மாலை 3:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக குறை கேட்பு கூட்ட அரங்கில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசின் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்பதால் மீனவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.

News November 6, 2025

ராமேஸ்வரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

image

மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தினால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் – மதுரை பகல் நேர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 56714 இந்த ரயிலானது 7,8,9,10,12,14,15.11.2025 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!