News October 19, 2025

ராம்நாடு: தீபாவளியன்று மஞ்சள் அலர்ட்.!

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரத்தில் நாளை (அக் 20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

மண்டபம் தென் கடல் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை

image

வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 60 கிமீ வரை நாளை(டிச.11) வீசக்கூடும். இதனால் மண்டபம் தென் கடல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு நாளை(டிச.11) வழங்கப்பட மாட்டாது. வட,தென் கடல் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

ராமநாதபுரம்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 10, 2025

ராமநாதபுரம்: லஞ்சம் வாங்கிய VAO கைது!

image

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது பட்டா மாறுதலுக்காக வேந்தோனி கிராம VAO கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். கருப்பசாமி தனக்கு ஆவனம் கிடைக்கவில்லை எனவும், தான் பரிந்துரை செய்வதற்காக ரூ.13,000 கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்கவே, அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

error: Content is protected !!