News March 27, 2024

ராம்நாடு: ஓபிஎஸ்ஸுக்கு வந்த அடுத்த சிக்கல்

image

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரமக்குடி தாலுகா கங்கைகொண்டான் மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் (75) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆக மொத்தம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மொத்தம் 6 பேர் களத்தில் உள்ளனர்.

Similar News

News January 16, 2026

ராம்நாடு: உயிரிழப்புகள் தடுக்கப்படுமா?

image

திருவாடனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குளித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று வாணியேந்தல் ஊரணியில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

News January 16, 2026

ராமநாதபுரம்: முதல்வர் நாளை வருகை!

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நினைவாக கட்டப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஜன.17) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பின்னர் பரமக்குடி வருகை தந்து மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். மணிமண்டபத்தில் இமானுவேல் சேகரன் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

News January 16, 2026

ராம்நாடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE I

error: Content is protected !!