News May 2, 2024
ராம்நாடு: உணவு பாதுகாப்பு துறை அதிரடி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பொட்டலங்களில் காலாவதி தேதி இன்றி விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் தலைமையில் இன்று ஆய்வு நடந்தது. ஆய்வில் முகப்பு சீட்டு இல்லா பொட்டலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பிரசாத பொட்டலங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் அச்சிட்டு விற்க அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News December 6, 2025
இராமநாதபுரம் கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய, சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரத்தில் அமைந்துள்ள மேலமடை ஊராட்சி சமூக நல்லிணக்கத்திற்கான விருதிற்கு தேர்வு செய்ய்யப்பட்டுள்ளது.
News December 6, 2025
ராமநாதபுரம் மாவட்ட நண்பகல் காவல் ரோந்து அதிகாரிகள்

இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கீழக்கரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவைக்கு இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
ராமநாதபுரம்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <


