News May 1, 2024
ராம்நாடு அருகே லஞ்சம்: அதிகாரிகள் சஸ்பெண்ட்

தேவிபட்டினம் முகமது பிலால் தன் வீட்டின் மேல் செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டி மனு அளித்தார். இதற்கு வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, வயர்மேன் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் செல்வி ஆகியோர் ரூ.9000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதை தொடர்ந்து ரமேஷ் பாபு, செல்வி, கந்தசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
ராமநாதபுரம்: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே, நீங்க கஷ்டப்பட்டு கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க
News December 12, 2025
ராம்நாடு: டூவீலரை ரயில்வே டிராக்கில் போட்டு ஒடிய இளைஞர்

உச்சிப்புளி அருகே பூட்டியிருந்த ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனத்தை அத்துமீறி கடந்து ரயில் அருகே வந்தததால் அப்படியே பைக்கை அப்படியே போட்டு விட்டு ஒடிய உச்சிப்புளி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் டாஸ்மாக் கடையை அடைக்க நேரம் ஆனதால் கேட்டை தாண்டி தண்டவாளத்தை கடந்தாக இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News December 12, 2025
ராமநாதசுவாமி கோவில் நடைதிறப்பில் மாற்றம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மார்கழி மாதத்தினை முன்னிட்டு டிசம்பர் -16ம் தேதி முதல் அதி காலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4 மணிமுதல் 4:30 மணிவரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். 5 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை, ஓதுதல் நடைபெற்று தீபாராதனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


