News March 31, 2025

ராமநாதபுரம்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News July 9, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்துப் பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஜூலை 9, 2025 அன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டங்களில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வெளியிடப்பட்ட புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 9, 2025

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் தரும் விநாயகர்

image

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில், தட்சிணாயனத்தில் தெற்கிலிருந்தும், உத்தராயனத்தில் வடக்கிலிருந்தும் மூலவர் விநாயகர் மீது சூரிய வெளிச்சம் படுகிறது. பக்தர்கள் அபிஷேகம், வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பு ஆகியவை இங்கு பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். *SHARE IT*

News July 9, 2025

சாயல்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

ராமநாதபுரம், மாவட்டம் சாயல்குடி அருகே சண்முகக்குமாரபுரத்திற்கும் பூப்பாண்டியபுரத்திற்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR ) இன்று மாலை வேன் ஒன்று டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, வேனில் பயணித்தவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை. விபத்து நேரத்தில் வேனுக்கு முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லாததால் மேலும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!