News August 10, 2025
ராமநாதபுரம்: பேருந்தில் Luggage-யை மறந்தால்; இதை செய்யுங்க..

ராமாநாதபுரம் மக்களே, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 7, 2025
இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கசென்ற மீனவர்களை கடந்த அக். 9 நள்ளிரவு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் 26 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டதால் தலா ரூ.2.50 லட்சம் அபராதமும், 2வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு தலா ரூ.2.75 லட்சம் அபராதம் விதித்தார்.
News November 7, 2025
ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம் இன்று (நவ. 7) மாலை 3:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக குறை கேட்பு கூட்ட அரங்கில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசின் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்பதால் மீனவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
News November 6, 2025
ராமேஸ்வரம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் காரணத்தினால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் – மதுரை பகல் நேர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 56714 இந்த ரயிலானது 7,8,9,10,12,14,15.11.2025 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.


